top of page

 

02/March/2015

பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தியாகும்- வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அன்சார்

பொலநறுவை மாவட்டம் மின்னேரிய போகஹதமன பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்டதாக இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகள் பொய்யானது என வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அன்சார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டாவது 28 குடும்பங்கள் இருக்கும் இக்கிராமத்தில் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான இக்கட்டிடம் பள்ளிவாசலுக்காக கட்டப்பட்ட கட்டிடம் இல்லை. வெள்ளம் வரும் காலத்தில் கிராம மக்கள் அங்கு தங்குவதற்காகவும் ஏனைய காலங்களில் மத்ரஸாவாக பயன்படுத்துவதற்கே இக்கட்டிடம் கட்டப்பட்டுவந்தது.

 

அதேபோல் பிரதேச சபையில் இக்கட்டிடம் பள்ளிவாசலுக்குரியது என அனுமதியும் பெற்றிருக்கவில்லை. இக்கட்டிடம் தொடர்பில் பெரும்பான்மை சமுகத்தினரால் பிரச்சினை ஏற்படுத்தப்படும் என கருதிய பிரதேச முஸ்லிம்களே இக்கட்டிடத்தை படிப்படியாக உடைத்தனர். அன்னிய மதத்தினர் இக்கட்டிடத்தை உடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

அன்னிய மதத்தினர் பள்ளிவாசலை உடைத்தனர் என வெளியான செய்தி பிழையானது என அவர் மேலும் தெரிவித்தார், என்று சிரிலங்காமுஸ்லிம்ஸ் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

bottom of page